இலங்கை

சுரேஷ் சலேவின் அடுத்த சதி அம்பலம்! கருணா கொடுத்த பகீர் வாக்குமூலம்

சுரேஷ் சலே உண்மையில் புலனாய்வுத்துறையின் ஒரு அதிகாரியாக செயற்பட்டாரா அல்லது கோட்டாபய ராஜபக்சவின் அடியாளாக செயற்பட்டாரா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சுரேஷ் சலேவினாலோ பிள்ளையானினாலோ மீண்டு வருவது என்பது அசாத்தியமான விடயமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றதுடன் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு அதிகளவிலான பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த விசாரணைகளை குழப்ப முற்படுவது என்பது இயலாத காரியம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளின் முகங்கள் விரைவில் வெளிவரும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், பாதிக்கப்பட்ட தரப்பினரிடமும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button