உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.

கடந்த, 8ம் திகதி , ஓமன் அருகே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீப்பிடித்த கப்பலில் இருந்த, 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஓமன் அருகே, நேற்று மற்றொரு சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது.

ஓமன் கடற்படையின் உதவியுடன், மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்தக் கப்பலில், 28 மாலுமிகள் இருந்தனர், அதில், 24 பேர் இந்தியர்கள்.

தீப்பிடித்த கப்பலில் இருந்து, 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாயமான மூன்று பேரை தேடி வந்தனர்.

தற்போது இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போன மூன்று இந்தியர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்களை உடனடியாகத் தாயகம் திருப்பியனுப்புவதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக விரைவாகத் திருப்பியனுப்புவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button