உலகம்

ஈரானின் தொடர் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து குவைத் வான்பரப்பு மூடப்பட்டது!

ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் அரசாங்கம், தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்றையதினம் அதிகாலை 4:50 மணி தொடக்கம், இந்த வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் வான்பரப்பிற்குள் நுழைந்த பல ஏவுகணைகளை தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக குவைத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையம் நேரடியாக ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளங்களை இலக்கு வைத்து தாங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button