Uncategorized

உளமார்ந்த நன்றியினை வழங்கி மகிழ்கின்றேன்!…  எனது நினைவு, கனவு அனைத்துமே அக்கினிக்குஞ்சே!

1991 இல் இருந்து அச்சுப்பதிப்பாக வெளியிட்டு வழங்கினேன்.

அச்சுப் பதிப்பின் செலவு மற்றும் விநியோகச் செயற்பாடுகளில் எதிர்நோக்க வேண்டிய அனாவசியச் சவால்களாலும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் மின்னிதழாக வெளியிட ஆரம்பித்தேன்.

அதனால், இப்பொழுது நாளும் பொழுதும், நேரங்காலம் கருதாது எந்நேரமும் நீங்கள் அனைவரும் வாசிக்கக்கூடிய வாய்ப்பு உண்டானதை எண்ணி மகிழ்வடைகிறேன். உங்களையெல்லாம் மனநிறைவடைய வைத்து வருகிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கு ஆத்ம திருப்தியாக இருக்கிறது.

அக்கினிக்குஞ்சு இணையச் சஞ்சிகை, ஆண்டு பதினாறில் அடியெடுத்து வைக்கிறது என்பது ஆனந்த பரவசத்தைத் தருகிறது. இந்தச் சாதனைப் பயணத்தில், கடந்த பதினாறு ஆண்டுகளாக அக்கினிக் குஞ்சு நிமிர்ந்த நடை போடுவதற்கு எனக்குப் பக்கபலமாக இருந்த அனைத்தும் நல்லுங்களையும் நன்றியுடன் நினைத்து, வாழ்த்துகின்றேன்.

ஆண்டுதோறும் அக்கினிக்குஞ்சு இசை அருவி நிகழ்ச்சியினையும், தமிழ் மொழி தொடர்பான பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவரும் தக்காரை மதித்து விருதுகள் கொடுப்பதையும் தலையாய பணியாகக் கொண்டு அக்கினிக்குஞ்சு செயற்பட்டுவருவதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

இம்முறையும், ஆண்டு பதினாறில் அடிபதிக்கும் ஆனந்த வேளையில், அவ்விரு நிகழ்வுகளையும் சிறப்புற நடத்தித் தமிழ் உறவுகளை மகிழ்விக்கிறது அக்கினிக்குஞ்சு!

அக்கினிக்குன்சின் வளர்ச்சியில் தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் படைப்பாளிகள், தகுந்த ஆலோசனைகளை வழங்கும் பல்துறை ஆளுமைகள், விளம்பரங்களை வழங்கியும், நிதியுதவி வழங்கியும் ஆதரவு தரும் நல்லுள்ளங்கள் உள்ளங்கள் , மற்றும் இவ்விழா சிறப்புற நடந்தேறுவதற்காகத் துணை நிற்கும் அன்பர்கள் எல்லோருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியினை வழங்கி மகிழ்கின்றேன்.

அன்புடன்
யாழ் எஸ்.பாஸ்கர்.
அக்கினிக்குஞ்சு ஆசிரியரும், நிறுவனரும்.
Email: akkinikkunchu@hotmail.com

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button