இந்தியா
தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர் என்றும் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார்.
திமுக தலைமையிலான கூட்டணி பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மகத்தான வெற்றியை பெரும் என்றும் திமுக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
![]()