கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்?

ஏலக்காய் உடலுக்கு பல நன்மைகள் தரும். அதிலும் கருப்பு ஏலக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.
கருப்பு ஏலக்காய் நமது உடலுக்கு ஒரு வரப்பிரசாதம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு ஏலக்காயை சரியான அளவிலும் சரியான முறையிலும் உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
பெரும்பாலான மக்கள் பச்சை ஏலக்காயின் நன்மை பற்றி கெள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் கருப்பு ஏலக்காயின் உடல்நலப் பலன்களைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த பதிவில் கருப்பு ஏலக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.
கருப்பு ஏலக்காயில் உள்ள சேர்மங்கள் குடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். செரிமானத்தை மேம்படுத்த கருப்பு ஏலக்காயை உட்கொள்ளலாம். உங்களுக்கு அடிக்கடி வாயு, வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் இரந்தால் அதற்கு கருப்பு ஏலக்காய் மிகவும் நன்மை தரும். இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் உணவுத் திட்டத்தில் கருப்பு ஏலக்காயைச் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும்.
உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் கருப்பு ஏலக்காயை உட்கொள்ளலாம். இதய நோயாளிகளும் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் தங்கள் உணவுத் திட்டத்தில் கருப்பு ஏலக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். கருப்பு ஏலக்காயில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வலுவான இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
உங்களுக்கு அடிக்கடி இருமல், சளி அல்லது நெஞ்சு இறுக்கம் போன்ற பிரச்சனை அஇருந்தால் நீங்கள் கருப்பு ஏலக்காய் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுவாசப் பிரச்சனைகளுக்கும் கருப்பு ஏலக்காயை உட்கொள்ளலாம். மேலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு ஏலக்காய், உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக அமையும்.
![]()