பலதும் பத்தும்

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் – உலகின் ஆபத்தான பாம்புகள்

நம்மை சுற்றி பல வகையான பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் ஒரே கடியில் மனிதனை கொல்லும் சில ஆபத்தான பாமபுகளும் உள்ளன.

உலகின் ஆபத்தான பாம்புகள்

பாம்பு என்றால் எல்லோருக்கும் பயம். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அந்த அளவிற்கு பாம்பு மிகவும் ஆபத்தான பிராணியாகும். 

நம்மை சுற்றி பல பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளும் உள்ளது நச்சுத்தன் அற்ற பாம்புகள் ஆபத்தான பாம்புகள் இப்படி பல வகை உள்ளது.

அந்த வகையில் உலகத்தில் மிகவும் ஆபத்தான பாம்புகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. தற்போது விஷத்தன்மை வாய்ந்த மிகவும் ஆபத்தான பாம்புகள் பற்றி பார்க்கலாம்.

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் - உலகின் ஆபத்தான பாம்புகள் | Top Dangerous Snakes In The World

எந்த வகை பாம்புகள்

இன்லேண்ட் தைப்பான்

‘இன்லேண்ட் தைப்பான்’ (Inland Taipan) எனப்படும் பாம்பு உலகத்தின் மிகவும் விஷமுள்ள பாம்பு எனப்படுகின்றது. இவை ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளில் வாழும். இந்தப் பாம்பு ஒருமுறை கடித்தால், அதன் விஷம் நூறு பேரைக் கொல்லும் திறன் கொண்டது. இந்த பாம்பின் விஷம் இதயம் மற்றும் நுரையீரலை முதலில் பாதிக்கும்.

பிளாக் மாம்பா

‘பிளாக் மாம்பா’ பாம்புகள் அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இது ஆபிரிக்காவில் வாழ்கிறது. இது அதி வேகமான பாம்பு எனப்படுகின்றது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி, எதிரிகள் மீது பாய்ந்து தாக்கும். இந்த பாம்பின் விஷம், ஒருவரை கோமா நிலைக்குத் தள்ளி, வெறும் 20 நிமிடங்களில் கொல்லும்.

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் - உலகின் ஆபத்தான பாம்புகள் | Top Dangerous Snakes In The World

ராஜ நாகம்

‘ராஜ நாகம்’, பெரும்பாலும் ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது. இந்தப் பாம்பு 18 அடி நீளம் வரை வளரக்கூடியது. இது தான் உலகின் நீளமான விஷப்பாம்பு எனப்படுகின்றது. அதுவும் இதன் விஷமானது ஒரு யானையை கொல்லும் அளவிற்கு திறன் வாய்ந்தது எனப்படுகின்றது.

செதில் விரியன்

‘செதில் விரியன்'(saw-scaled viper) பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும். இது பொதுவாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த பாம்பு தனக்கு ஆபத்து வருகிறது என்பதை அறியும் போது தன் உடலில் உள்ள செதில்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து, ஒரு பயங்கரமான ஒலியை எழுப்பும். அதன் விஷம் நேரடியாக இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயிரைப் நொடியில் பறிக்கும்.

ஒரே கடியில் ஒரே நொடியில் மரணம் - உலகின் ஆபத்தான பாம்புகள் | Top Dangerous Snakes In The World

கடலோர தைப்பான்

ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரியும் ‘கடலோர தைப்பான்’ (Coastal Taipan) எனப்படும் பாம்பு. இது மிகவும் கொடிய பாம்பு எனப்படுகின்றது. கண் இமைக்கும் நேரத்தில் தன் எதிரியை பல முறை கடித்து உயிரை கொல்லும். இந்தப் பாம்பு உடலில் செலுத்தும் விஷம் இரத்த உறைவை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் அரை மணி நேரத்திற்குள் கொல்லும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *