பலதும் பத்தும்

பணக்காரர் அம்பானி வீட்டின் 11வது மாடியின் ரகசியம்

அம்பானி வீட்டின் 27 மாடிகளில் 11 மாடியில் ஒரு ரகசியம் உள்ளது. இதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.

நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் பிரமாண்டான வீடு உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வீடு 27 மாடிகளை கொண்டுள்ளது. நீச்சல் குளம் முதல் ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சுகாதார மையம் வரை அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

அதன் ஆடம்பர வசதிகளுக்காக இது எப்போதும் இணையத்தில் ஒரு பேசுபொருளாகவே உள்ளது. இந்த வீடு ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல அங்கு சில விசித்திரமான விடயங்களும் உள்ளது.

அதன்படி தற்போது இணையத்தில் தற்போது ஒரு விடயம் வைரலாகி வருகின்றது. அதன்படி 27 மாடிகளை கொண்ட அந்த பிரமாண்ட கட்டிடத்தில் 11 மாடி மிகவும் விசித்திரமாக வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த மாடியின் இரகசியம் என்னவென்றால் இங்கு பூசாரிகள் மட்டுமே வசிக்கின்றனர். நீதா அம்பானி செல்வந்தராக இருப்பதற்கும், தனது குடும்பத்தின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் விரிவான தினசரி சடங்குகளை இங்கு தொடர்ந்து நடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 11 வீட்டில் நாள் முழுவதும் மந்திர உச்சாடனம், யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்படகின்றது.

நீதா அம்பானி மிகுந்த மதப்பற்று உடையவர். அதனால், எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, வீட்டில் நேர்மறை ஆற்றலை நிலைநிறுத்துவதற்காக வீட்டில் தவறாமல் பூஜை செய்து வருகிறார்.

இந்த 11 மாடியில் ஒரு பெரிய கோவில் இருப்பதாகவும், அங்குள்ள சிலைகள் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்களால் பதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அம்பானி குடும்பம் இந்த வீட்டின் 27வது மாடியில் வசித்து வருகிறது. இதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது. இந்த மாடியில் தாராளமான சூரிய ஒளி, தூய்மையான காற்று மற்றும் அமைதி கிடைப்பதாக நீதா அம்பானி ஒரு காளொளி மூலம் கூறி இருந்தார்.

ழ் மாடிகளின் சலசலப்பிலிருந்து விலகி அவர்கள் மேலே அமைதியாக வாழ்கின்றனர். முகேஷ் அம்பானியின் இந்த பிரமாண்டமான வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், திரையரங்கம், தோட்டம் என வசதிகளுக்குக் குறைவே இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், நீதா அம்பானி நம்பிக்கைக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பவர் என்பதால் வீட்டின் 11வது மாடியை பூசாரிகளுக்காகவும் அதை ஒரு கோவில் போலவும் சமய சடங்குகளுக்காகவும் ஒதுக்கி உள்ளார் என்பது தான் இரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *