வடக்கில் உள்ள விகாரைகளுக்கு பௌத்தர்கள் செல்லத் தடையா?; யார் எங்கு செல்வதென் ஜனாதிபதி தீர்மானிப்பதா?

பௌத்தர்கள் செல்ல வேண்டிய மற்றும் செல்லக் கூடாத விகாரைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும், ஜனாதிபதியின் கருத்துக்களும் செயற்பாடுகளும் எல்லாள மன்னன் இறக்கும் போது, தான் சிங்களவனாகியாவது இந்த இனத்தை பழிவாங்குவேன் என்று கூறியது இப்போது நடப்பதை போன்றே இருக்கின்றது என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா ராமாஞ்ஞ மஹா நிகாய மகாநாயக்க தேரரை சந்திப்பதற்காக மகா சங்க பிக்குகள் தலைமையகம் சென்றிருந்த போது, அங்கிருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பணம் இருப்பவர்களை கண்டால் விபச்சாரம் செய்யும் பெண்கள் தமது சைகளை காட்டி தமது உடம்பை காட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவர். ஜனாதிபதியும் அதுபோன்று வடக்கிற்கு செல்லும் போது அவ்வாறு அங்குள்ள மக்களையும், டயஸ்போராக்களையும் கவர்வதற்காக ஒவ்வொன்றை செய்கின்றார். அவருக்கு அங்கு சென்றதும் மற்றைய இனங்களின் உரிமைகள் மறந்துவிடுகின்றன. இனவாதம் தொடர்பில் யாழ்ப்பாணம் செல்லும் போதே கதைக்கின்றார்.
பௌத்தர்கள் செல்ல வேண்டிய விகாரைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள உரிமை என்ன? வடக்கில் உள்ள விகாரைகளுக்கு சென்று சில் எடுப்பதற்கு பௌத்தர்களுக்கு தடையா? ஊரில் உள்ள விகாரைகளில் மட்டுமா சில் எடுக்க வேண்டும்? அப்படியென்றால் இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மக்காவுக்கு செல்ல முடியாதா? எங்களுக்கு புத்தகயாவுக்கு போக முடியாதா? தமிழர்களுக்கு கதிர்காமம் வருவதற்கு உரிமை இல்லை? கத்தோலிக்கர்கள் மடு தேவாலயத்திற்கு போக முடியாதா? இவர் தலை பழுதடைந்த ஜனாதிபதி. இந்த நாட்டில் எந்தவொரு மதத்தவரின் ஆன்மீக செயற்பாடுகளை எங்கே செய்வதென்று தீர்மானிப்பதற்கு இந்த ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
அங்கு போகும் போது அரசியல் விபசாரியை போன்று அங்குள்ள வாக்குகளுக்காக எதனையாவது கூறிவிட்டு வருகின்றார். எல்லாளன் என்ற தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர் இறக்கும் போது, நான் சிங்களவனாகியாவது இந்த இனத்தை பழிவாங்குவேன் என்று கூறியதாக கூறப்படுகின்றது. அது நடந்துள்ளது போன்றுதான எனக்கு தெரிகின்றது.
யுத்தத்திற்கு குழிவெட்டிய அனுரகுமார, யுத்தத்தை வெற்றிபெற்ற யாழ்ப்பாணத்திற்கு சென்று இராணுவ முகாம்களை அகற்றி, வீதிகளில் நடந்த திறிந்து அந்த சமாதானத்தின் தண்டனையை அனுபவிக்கின்றார் என்றார்.
![]()