பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடத்துக்கு மேல் சிறையில் இருப் போருக்கு விடுதலை?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிப்போரின், தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன் இந்த விடயம் தொடர்பான பரிசீலனைக்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 வருடங்களுக்கு மேலாக தண்டனையை அனுபவிப்போர் தொடர்பில் குறித்தக் குழு ஆராய்ந்து வருகின்றது .இந்தக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விரைவில் கிடைக்கும்.வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையிலேயே இந்த விடயங்கள் ஆராயப்படுகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமே கைதுகள் இடம்பெற்றுள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அத்துடன், எவரேனும் தனிநபர்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை எம்மிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
![]()