உலகம்

வெனிசுலா அரசுக்கு சவால் விடுத்த நோபல் பரிசு பெற்ற மச்சாடோ

இந்த நேரத்தில் எங்கள் முக்கிய கூட்டாளி அதிபர் டிரம்ப் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தங்கள் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அமெரிக்கா வெனிசுலாவுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ அரசை எதிர்த்து போராடிவரும் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரீனாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவர் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

வெனிசுலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நோக்கிய அமைதியான மாற்றத்திற்கு இந்திய மக்களும் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

வெனிசுலா மக்களின் இறையாண்மை விருப்பத்தை மதிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும், போராட்டத்தில் இந்த நேரத்தில் எங்கள் முக்கிய கூட்டாளியாக இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்வு செய்யப்பட்ட உடனே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பரிசை டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக கூறி புகழ்ந்தார்.

தற்போது அவர் மீண்டும் அதிபர் டிரம்பை பாராட்டும் வகையில் பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *