முச்சந்தி

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும்

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வே ண்டும். அரசியல் தலையீடு இருத்தல் கூடாது. நீதித்துறையை அரசியல்மயப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரிகளை வரையறையற்ற வகையில் அதிகரித்து அரவ வருமானம் அதிகரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அரச சேவை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையும் அரசியலாக்கப்பட்டு அரசியல் நியமனங்கள் வழக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற கட்டமைப்பையும் அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

அரசியல் தலையீடு இருத்தல் கூடாது. நீதி த்துறையை அரசியல்மயப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும் .

ஆளும் தரப்பில முன்னிலையில் இருப்பவர்களின் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். நாட்டு மக்கள் வெகுவிரைவில் பல விடயங்களை தெரிந்துக்கொள்வார்கள். நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்தினால் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு வராது.

எதிர்க்கட்சியில் இருந்த போது மக்கள் பக்கம் இருப்பதாக குறிப்பிட்டீர்கள்.தற்போது அதிகாரத்தில் உள்ளீர்கள் ஆகவே மக்களின் தரப்பில் இருந்து செயற்படுங்கள்.

மத்திய வங்கியின் கையிருப்பு ரில்லியன் கணக்கில் உயர்வடைந்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் ஏன் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்யாமல் உள்ளீர்கள்.

பாராளுமன்றத்தில் வேண்டிய வரையில் பொய்யுரைக்க முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.இவர்களின் கருத்து முரண்பட்டதாகவே காணப்படுகிறது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்துவதை பிரதான கொள்கையாக அரசாங்கம் கொண்டுள்ளது. விமர்சனங்களை தவிர்த்து விட்டு மக்களுக்காக செயற்படுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *