இலங்கை
பதவி வழங்கிய அநுர பதவியைப் பறித்த சஜித்; ஐ.ம.ச.பதவிகளிலிருந்து எரான் விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்தே அவர் கட்சி பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சிக் கொள்கைகளுக்கமைய அவர் தொடர்ந்தும் கட்சியில் பதவிகளை வகிப்பது பொறுத்தமற்றது என்றும். இதனால் அவரை கட்சியின் பதவிகளில் இருந்து விலகுமாறும் ஐக்கிய மக்கள் சக்தி செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எரான் விக்கிரமரத்ன கட்சியில் குறித்த பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அறிவித்துள்ளார்
![]()