பலதும் பத்தும்

2021 ஆம் ஆண்டில் மலர்ந்த கார்ப்ஸ் பூ; துர்நாற்றத்துடன் இருந்தும் காணக் குவியும் மக்கள்!

துற்நாற்றம் மிகுந்த கார்ப்ஸ் பூவை மக்கள் கூட்டம் திரண்டு சென்று பார்வையிட்டுள்ளனர்.

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் இந்த கார்ப்ஸ் பூ ( Corpse flower) காணப்படுகின்றது.

இந்த அரிய வகை தாவரம் அதன் தனித்துவமான தோற்றத்திற்கும் அதிகமான துர்நாற்றத்திற்கும் பெயர் பெற்றதாக உள்ளது.

இருப்பினும் இதன் அழகையும் அசாதாரணமான அதன் தன்மையும் காண பலரும் விரும்புகின்றனர். இந்த கார்ப்ஸ் பூ அழிந்து வரும் தாவர வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தப் பூ கடைசியாக 2021 ஆம் ஆண்டு பூத்த போது நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே நிலைத்தன்மையில் இருந்துள்ளது.

இந்த முறை பார்ப்பதற்கு அழகாக உள்ளதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

போலந்தின் தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் இந்தப் பூவை உலகம் முழுவதிலும் உள்ள தாவர ஆர்வலர்கள் கண்டு ரசிக்கின்றனர்.

இந்தப் பூவின் பூப்பு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்திற்கும் என்பதால் இதனை காண்பது மிகவும் அரிதான அனுபவமாக கருதப்படுகிறது.

எனவே இதனை பார்க்க ஒவ்வொரு முறையும் ஏராளமான மக்கள் குவிந்து செல்லும் நிலையில் தற்போதும் கார்ப்ஸ் பூவைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button