இலங்கை

நாமலுக்கு பிடியாணை!; நாடு திரும்பியதும் கைதாவார்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகனும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையொன்றில் ஆஜராகத நிலையிலேயே அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று தொடர்பான வழக்கு தொடர்பிலேயே நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதன்படி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு நீதவான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாமல் ராஜபக்‌ஷ, நேற்றைய தினத்தில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்றைய தினத்தில் நாடு திரும்பலாம் என்றும், இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அவர் நாடு திரும்பியதும் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் அவராகவே ஆஜராகுவார் என்று அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *