தேர்தலில் குதிக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்!

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ்மா அதிபர் பதவியில் பணிகளை செய்ய முடியாதவாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது அந்தத் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறும் சாத்தியங்களே உள்ளன. இந்நிலையில் பதவி நீக்கப்பட்ட பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()