முச்சந்தி

கழிவகற்றும் உழவு இயந்திரத்தில் வந்த பிரதேச சபை தவிசாளர்கள்;  ”படம்”காட்டுவதாக அமைச்சர் சுனில் விசனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகனம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் கச்சேரிக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சபைகள் காலம் முடிவுற்று கலைக்கப்பட்டதையடுத்து பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் பிரதேச சபைகள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் அந்த நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற ஆளுநர் பாவிக்காத வாகனங்களை தொடர்பாக அறியத்தரும்படி பிரதேச சபைகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபை வாகனங்களை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளனர்..

இதனையடுத்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு பிரதேச சபை தவிசாளர்கள் ஆட்சியை பொறுப்பேற்றதையடுத்து மீண்டும் வாகங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

இருந்தபோதும் பிரதேச சபை தவிசாளர்களுக்கான வாகனம் இல்லாததால் அவர்கள் தமது சேவையைச் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர் எனவே பிரதேச சபைகளில் இருந்து எடுத்து சென்ற வாகனங்களை மீண்டும் வழங்குமாறும் கோரி செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளீதரன், வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் ஆகிய இரு தவிசாளர்களும் நேற்று இடம்பெறவிருந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக செங்கலடி பிரதேச சபையின் கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் 16 கிலோ மீற்றர் தூரம் பிரயாணித்து மட்டக்களப்பு கச்சேரிக்கு வந்தடைந்தனர்.

இந்த உழவு இயந்திரத்தில் பிரயாணித்த உழவு இயந்திரத்தை கச்சேரி வளாகத்தில் உட் செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி பின்னர் உட்செல்ல அனுமதித்தனர்

இதேவேளை இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்திநெத்தி தெரிவிக்கையில் நாங்கள் ஒருபோதும் பிரதேச சபைகளின் தவிசாளர்களின் வாகனங்களை பெறவில்லை. இவர்கள் ஊடகங்களுக்கு படம் காட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் வந்துள்ளனர். அத்துடன் இவர்கள் கழிவு அகற்றும் வாகனத்தை அந்த வேலைக்கு செல்ல விடாது துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button