உலகம்

நேபாளத்தில் பரவும் புதிய கொரோனா – ஏழு நாட்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாளத்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும் கடந்த டிசெம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் அங்கு  புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு முதல்முறையாக கடந்த ஜூன் 24 ஆம் திகதி ஒருவர்  உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நோபாளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து அந்நாட்டின் எல்லையின் 17 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *