செம்மணி புதைகுழி இறப்புகளுக்கு யாருடைய துப்பாக்கிகள் காரணமெனத் தெரியாது?

செம்மணியில் புதைக்குழியில் இருந்து புத்தகப் பையொன்று கிடைத்ததை போன்று, இன்னும் தோண்டிக்கொண்டு போனால் இராணுவ சிப்பாயின் உலோக இலக்கச் சின்னங்களும் வெளிவரலாம் என்றும், இதனால் ஆய்வுப் பணிகள் முடிவடையும் வரையில் அந்த எலும்புக்கூடுகள் யாருடையதாக இருக்கும் என்று இறுதி முடிவுக்கு வர முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், செம்மணி மனித புதைக்குழியில் இருந்து சிறுவனொருவனின் பையொன்று மீட்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது பதிலளித்த விமல் வீரவன்ச கூறுகையில்,
ஆம், அங்கே சிறுவனொருவரின் பாடசாலைப் பையொன்று மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வுப் பணிகள் முடிவடையும் வரையில் எமக்கு இறுதி முடிவுக்கு வர முடியாது. சிலவேளை இன்னும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கும் போது இராணுவ சிப்பாயின் இலக்கமிடப்பட்ட உலோக சின்னம் கிடைக்குமாக இருந்தால் அந்த விசாரணை வேறு பக்கத்திற்கு செல்லலாம். இன்னும் 15 நாட்கள் வரையில் ஆய்வு நடக்கும். அதன்பின்னர் என்ன விடயம் என்று தெரியவரும். அது யுத்தம் நிலவிய பிரதேசமாகும். சகல தரப்பினர் பக்கத்திலும் துப்பாக்கிகள் வெடித்துள்ளன. யாருடைய துப்பாக்கியால் இறந்த மக்கள் என்பதே எமக்கு தெரியாமல் இருக்கின்றது.
எவ்வாறாயினும் இறந்த மக்களின் எலும்புக்கூடுகளை தேடிக் கண்டுபிடித்து கடந்த காலத்திற்கு செல்வதல்ல நடக்க வேண்டியது. எதிர்காலத்தில் அவ்வாறான விடயம் நடக்காமல் இருக்க இதயங்களை சுகப்படுத்துவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்யப்படுவது இதயங்களை சுகப்படுத்துவதற்காக அல்ல. இதயங்களில் மீண்டும் வெறுப்புணர்வுகளை உருவாக்குவதையே செய்கின்றனர். இதன்மூலம் இலங்கைக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. இலங்கையில் மீண்டும் வெறுப்புணர்வுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணமே சர்வதேசத்திற்கு உள்ளது. அடிப்படைவாத குழுக்களுக்கும் அந்த நோக்கமே உள்ளது. அரசியல் நோக்கத்திற்காகவே இதனைச் செய்கின்றனர் என்றார்.
![]()
திரு.விமல் வீரவன்ச அவர்களே!
செம்மணி விவகாரம் Hon.President அநுர அரசு ஆட்சியிலிருப்பதால்தான் நடைபெறுகின்றது.இனவாதி நோக்கம் கொண்டவர்கள் ஆட்சியிலிருந்தால் அதற்கான வாயப்பே கிடைக்காது.
தமிழர்களைப் பகடுகொலை செய்து செம்மணியில் புதைத்தது இராணுவமே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..இதுவெல்லாம் நடந்த காலகட்டம் திரு.மகிந்தராஜபக்சா இலங்கையின் ஜனாதிபதியாகவும்,அவரின் தம்பியார் திரு.கோதபாயாராஜபக்சா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில்தான்.
திரு.சரத் பொன்சேகா இராணவத் தளபதியாக இருந்தும்கூட பாதுகாப்புச் செயலாளரின் இனவாதக்: கட்டளைகளே படுகொலைகளை நிறைவேற்றியது.
செம்மணிப் படுகொலைக்கான குற்றத்தைச் செய்தவர்களாக முன்னாள் ஜனாதிபதி.திரு.மகிந்த ராஜபக்சா வும் பாதுகாப்புச் செயலாளரும் படுகொலைகளை நிறைவேற்றிய இராணுவத்தினருமே .
எனவே குற்றத்தை ஒப்புக் கொண்டு தமிழரிடம் மன்னிப்புக் கேளுங்கள்.திரு.விமல் வீரவன்சா அவர்களே உங்களக்கு தமிழர்களைப் படுகொலை செய்த விடயம் முன்பே தெரியுந்தானே.நீங்களும் இதற்க உடந்தைதானே.