உலகம்

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் பலி

தான்சானியாவில் பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய பீச்சியான விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

தான்சானியா – கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதிய வேகத்தில் இரு பஸ்களும் தீப்பிடித்து எரிந்துள்ளதோடு, பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் பலி | 40 Killed In Bus Accident In Tanzania

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதிலும், பலரை காப்பாற்ற முடியவில்லை. மேலும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பயணிகள் இருந்த பஸ்சின் டயர் பஞ்சராக, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *