உலகம்

பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை!; இந்தியா தெரிவிப்பு!

‘ஒப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக, ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் பயங்கரவாத முகாம்களின் முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

இந்நிலையில், தாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை சீரமைக்கும் பணிகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வருவதாக இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *