இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு; பிரதான எதிர்க்கட்சி பகிரங்கம்

தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக பேசுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெலிகம சம்பவத்துடன் உண்மையில் பாதாள உலகக் குழுக்கள் தொடர்புபட்டுள்ளன என்றால் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இது தேசிய மக்கள் சக்தியின் நாடகம் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1988, 1989களில் காணப்பட்ட வன்முறை அரசியல் கலாசாரம் மீண்டும் தலைதூக்குகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

பிரதேசபை அமர்வொன்றில் எவ்வாறு நூற்றுக்கணக்கான குண்டர்கள் உள் நுழைந்தனர்.

ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஏனையோருக்கு பிரிதொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறது. அதனால் தான் இராணுவ வீரர்களை, வீரர்கள் என அழைப்பதில் கூட பின்வாங்குகின்றனர்.

இதன் மூலம் குறிப்பிட்டவொரு தமிழ் சமூகத்தை மகிழ்விப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினருக்காக நிற்கப் போவதில்லை.

மாறாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம்.

அதனை இந்த அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *