உலகம்

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துவரும் குழந்தைகள்

போதுமான மனிதாபிமான உதவி தொடர்ந்து கிடைக்காததால், காசா பகுதியில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 66 ஐ எட்டியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ‘ஆபத்தான விகிதத்தில்’ அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) சுட்டிக்காட்டியுள்ளது.

காசா பகுதிக்குள் பால், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பிற உணவு உதவிகளை இஸ்ரேல் தடுப்பதே இந்த நிலைமைக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *