கிரிமியாவில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்த உக்ரைன்

கிரிமியாவில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டன.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU/SSU) ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவின் கீரொவ்ஸ்கே விமானத் தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ஜூன் 28 இரவு நடந்த இந்த தாக்குதலில் மூன்று தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு Pantsir-S1 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டது.
தகவல்களின்படி, Mi-8, Mi-26 மற்றும் Mi-28 ஹெலிகாப்டர்களை முழுமையாக அழிக்கப்பட்டதுடன், விமானத் தளத்தில் இருந்த ஏவுகணை அமைப்புகள், வெடி பொருள் கிடங்குகள், மற்றும் ட்ரோன் ஆயுதங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.
இந்த தாக்குதலின் போது இரண்டாவது நிலை வெடிப்பும் நடந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவின் விமானப் படைகள் மற்றும் குண்டு வீசும் தாக்குதல்களைக் குறைக்க இது போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகள் தொடரப்படும்.
ரஷ்யாவின் எந்த பாகத்திலும், முன்கோட்டையோ, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளோ அல்லது அகழ்நிலைகளிலோ, அதன் விலைமிக்க ஆயுதங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைக் கணக்கில் எடுக்க வேண்டும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, ஜூன் 27-ஆம் திகதி இரவிலும் உக்ரைன் பாதுகாப்புப் படைகள், ரஷ்யாவின் வொல்கோகிராட் பகுதியில் உள்ள மாரினோவ்கா விமானத் தளத்தில் நான்கு Su-34 போர் விமானங்களைத் தாக்கி சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
![]()