இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணிகள் – இதுவரையில் 27 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 27 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணி (28) மேற்கொள்ளப்பட்டது.

அதில் மூன்று மனித ஓட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த (26) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து   (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணி (28) மேற்கொள்ளப்பட்ட போது மேலும் 3 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(27) வரை 24 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி இதுவரையில் 27 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *