இலங்கை

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவியுரிமை : அடுத்த எம்.பி கௌசல்யா

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவாகுவார். என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவியை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் அவ் விசாரணை ஜூலை 2 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ச்சுனா எம்.பி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமாயின் அந்த இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவாகுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்தது சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் என்றும், தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்று அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *