இந்தியா

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்முறை!- மூவர் கைது!

கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபலமான சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்முறை நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக, இரு மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர் ஒருவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவ பரிசோதனை, சிசிடிவி பகுப்பாய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக கொல்கத்தா மேயர் ஃபிராட் ஹக்கீம் “முழுமையான அறிக்கையைப் பெற்ற பிறகே கருத்து கூறுவேன்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் மேற்கு வங்க அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. பா.ஜ.க.வின் அமித் மால்வியா மற்றும் பிரதீப் பண்டாரி, எக்ஸ் தளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த நிகழ்வு மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் அமித் மால்வியா மற்றும் பிரதீப் பண்டாரி, எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வங்காளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும், இத்தகைய குற்றங்கள் தொடர்வது அரசு நிர்வாகத்தின் முறிவை வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் இருப்பிடம் வெளியிடப்படாதது கடும் சந்தேகம் எழுப்புவதாகவும், இது திட்டமிட்டு மூடிமறைக்கும் முயற்சி எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு முன், கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்முறைக் கொலை வழக்கின் தாக்கம் இன்னும் நீங்காத நிலையில், தற்போதைய சம்பவம் வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை பதில் அளிக்காத நிலையில், பொலிசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *