இலங்கை

ஈரானின் அதிரடி முடிவு – மீண்டும் எரிபொருள் விலைகள் உயரும் அபாயம்?

உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகமானது இந்த பெர்சியன் அல்லது அரேபியன் வளைகுடாவில் ஹார்முஸ் நீர்முனை வழியாகவே நடைபெற்று வருகிறது.

ஹார்முஸ் நீர்முனையை கடந்து அரபிக் கடல் வழியாக உலகின் பிற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன.

தற்போது அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *