இலங்கை

இலங்கை அபிவிருத்தியடைந்த நாடுகளின் குழுவில் இணைய முடியாது! – ரணில் சுட்டிக்காட்டு

ரஷ்யா தனிமைப்படவில்லை எனவும் உலகெங்கிலும் அது தொடர்புகளை கொண்டுள்ளது எனவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில், இலங்கையும் இணைந்துக் கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் செய்னட் பீட்டர்ஸ்பேக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையை பொறுத்தவரை, அது அபிவிருத்தியடைந்த நாடுகளின் குழுவில் இணைய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் இன்று வேறெந்த குழுவைக்காட்டிலும் பிரிக்ஸ் அமைப்பே பெரிய அமைப்பாக உள்ளது.

அணிசேரா அமைப்பு தகர்ந்து போயுள்ள நிலையில் பிரிக்ஸ் அமைப்பே முன்னிலைப் பெறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *