இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதினை வழங்கிய சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளன. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன்.

அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கௌரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,சைப்பிரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில்
கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பிற்கிணங்க ஜி-7 உச்சி மாநாட்டிலும் கலந்துக்கொள்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *