இந்தியா

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம்   இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றுக்கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து வீழ்ந்ததில் பலர் ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளனர்.

இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *