உலகம்

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பில் இணக்கப்பாடொன்றிற்கு வரவேண்டும் அல்லது எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்குவராவிட்டால் படுகொலைகள் இடம்பெறும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே பெருமளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் இடம்பெற்றுள்ளன,இந்த படுகொலைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இன்னமும் நேரம் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அடுத்த கட்ட தாக்குதல் இன்னமும் ஈவிரக்கமற்றதாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் ஈரானிய சம்ராஜ்யமாகயிருந்ததை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *