இந்தியா

நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸின் அழைப்பின் பேரில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் அந்நாட்டுக்கு பயணம்
மேற்கொள்கிறார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் வணிகத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடைபெறும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட
உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பிலும் விவாதிக்கப்படும்.

குரோஷியாவுக்குப் விஜயம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

அங்கு, பிரதமர் ஆண்ட்ரே பிளென்கோவிச் மற்றும் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்த மூன்று நாடுகளுகான பயணம், மத்திய தரைக்கடல் பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் உறவுகளை
மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *