இலங்கை

இந்த மாதத்திற்குள் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிவு தையிட்டி விகாரைக் காணி விடுவிக்கப்படமாட்டாது

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்தக் காணிகளில் விகாரை தொடர்ந்தும் இருக்குமெனவும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்.

அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்தக் காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் .தையிட்டி விகாரை பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வை வழங்க நாங்கள்நடவடிக்கை எடுப்போம்.

தையிட்டியில் விகாரையை உடைக்க முடியுமா? முடியாது. விகாரைக்குரிய காணியை வைத்துக்கொண்டு மீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.

இந்தக் காணிகள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு அதனை மக்கள் பார்வையிட்டு தங்கள் காணிகள் இருக்கிறதா,இல்லையா என்பதை பார்வையிடலாம். அங்குள்ள காணிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுடைய காணிகளுக்குள் விகாரை கட்டப்பட்டிருக்குமாக இருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது காணியின் பெறுமதி நஷ்ட ஈடு கட்டாயம் அரசாங்கத்தினாலோ அல்லது உரிய தரப்பினாலோ வழங்கப்படும்.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த தையிட்டி பிரச்சினையை வைத்து எல்லா தரப்பிலும் அரசியல் செய்வதற்கு இனவாதிகள் முயல்கிறார்கள்.

கடந்த வாரத்தில் தென்னிலங்கையிலிருந்து ஒரு பெரிய அணி இங்கு வர முயன்றார்கள்.

அங்குள்ள ஒரு சில பிக்குமார்களுடைய முயற்சி, தலைவர்களுடைய முயற்சி பொலிஸாருடைய நடவடிக்கை மூலமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் அவ்வாறு வந்திருந்தால் அது எவ்வாறு முடிந்திருக்கும் என்பதை எம்மால் சொல்ல முடியாது.

நாடு அமைதியான வகையில் போகும்போது அதனை சீர்குலைக்க பல தரப்புகள் முயல்கிறது. அதனை தையிட்டியில் பயன்படுத்த நாம் அனுமதிக்க முடியாது. அதற்கு தையிட்டி மக்கள் இரையாகக் கூடாது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *