தமிழரசுக்கு ஆதரவா?; டக்ளஸ் இன்று அறிவிப்பார்

உள்ளூராட்சி சபைகளில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கவோ ஆட்சியில் பங்கெடுக்கவோ மாட்டாது என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சியமைக்க ஆதரவை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக ஆதரவு கோரும் வகையில் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சி அலுவலகத்தில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் சங்கு மற்றும் சைக்கிள் கூட்டணி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக கோராத நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை ஆதரிக்கும் முடிவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()