உலகம்
ஹங்கேரியில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்!

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிரதமர் விக்டோர் ஓர்பானின் அரசாங்கத்துக்கு எதிராக சுமார் 15,000 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் செயற்பாடுகள் மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , அரசாங்கம் தமது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும் கோஷம் எழுப்பியிருந்தனர்.
இப்போராட்டத்தில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் , எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()