இலங்கை

நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதணியோடு நுழைந்த பிக்கு! குவியும் விமர்சனங்கள்

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பௌத்த பிக்கு ஒருவரும், சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும் பாதணிகளை அணிந்து சென்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதியுயர் பாரம்பரியங்களுடன் பேணப்பட்டு வரும் ஆலய சூழல் மற்றும் ஆலயம்சார் செயற்பாடுகளுக்கு மத்தியில், பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு ஒருவர் உள்ளிட்ட சிலர் வருகைத் தந்தமைவிமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தெய்வ வழிபாட்டில் உள்ளதை உள்ளபடி காத்தலும், பேணலும் தலைமுறை தலைமுறையாய் சீர்குழையாமல் வழிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தமிழர்களால் அதிகம் போற்றப்படும் ஆலயத்திற்குள் இவ்வாறு பாதணி அணிந்து வருவதென்பது பலர் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகபூசணி அம்மன் ஆலயம் பலரும் வியந்து பார்க்கும் வரலாறு கொண்ட, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து தரிசித்துச் செல்லும் புகழ்பெற்ற தளமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், பாதணிகள் அணிந்து வருதல் போன்ற செயற்பாடுகள் குறித்த புனித தளத்திற்கு உகந்ததல்ல என்பதும் குறிப்படத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *