இலங்கை

முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறிய ஜனாதிபதியின் கையெழுத்து! பதவி விலக கோரும் நாமல்

சிறைக்கைதி ஒருவரின் பொதுமன்னிப்பு விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்கத் தவறியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஜனாதிபதியின் செயலால் ஏற்பட்ட தவறுக்கு அவர், அரசாங்க அதிகாரிகளையோ அல்லது சிறைத்துறையையோ குற்றம் சொல்ல முடியாது.

ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூற முடியாது.

அவர் கையெழுத்திடுவது அவருக்கு புரியவில்லை என்றால், அது நிதி, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் உட்பட முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. எனவே ஜனாதிபதி அல்லது அவரது செயலாளர் முழு பொறுப்பையும் ஏற்பதுடன் யாராவது பதவி விலக வேண்டும்.

இதில் நிதி மோசடிக்காகத் தேடப்படும் நபர் ஒருவர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதி அமைச்சகம் பட்டியலை அங்கீகரித்த நிலையில், கையெழுத்திடும் முன் அதன் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் கடமையாகும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *