2029 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஹரிணி; இரகசிய நடவடிக்கையில் ரணில்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு ஏழு மாதங்களையே கடந்துள்ள நிலையில், 2029 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவை பொது வேட்பாளராக நியமித்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு, ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தாலும் இதுவரை இருதரப்பு உடன்படிக்கை எவையும் எட்டப்படவில்லை.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியலில் முக்கிய நபராக தற்போது பார்க்கப்படுவதுடன், அனைத்து அரசியல்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் திறன் காணப்படுவதாலும் அவரை பொது வேட்பாளராக அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை அமைச்சரவை மாற்றுவதற்கான அழுத்தம் மற்றும் பிரதமர் பதவியை மாற்றும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்துக்குள் உட்கட்சி மோதல்கள் ஏற்பட்ட நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அப்பதவியிலிருந்து அகற்றுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை உருவாக்குமென பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் அந்த முயற்சிகளை ஜே.வி.பி. இடைநிறுத்தியுள்ள நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது அரசியல் செயற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()