உலகம்

மனிதாபிமான கப்பலை இஸ்ரேலை நோக்கி படையினர் கொண்டு செல்கின்றனர்- சர்வதேச ஊடகங்கள்

சூழல் ஆர்வலர் கிரெட்;டா தன்பேர்க் உட்பட செயற்பாட்டாளர்கள் பலருடன் காசாவை நோக்கி மனிதாபிமான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலிற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய படையினர் அந்த கப்பலை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றனர்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது, கப்பலை பாதுகாப்பாக இஸ்ரேலிற்கு கொண்டுசெல்கின்றோம் அதில் உள்ளவர்கள் அவர்களின் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கப்பலிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னூ பிரீடம் புளோட்டிலா அமைப்பு வீடியோவொன்;றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் செயற்பாட்டாளர்கள் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம் எங்களைஇஸ்ரேலிய படையினர் கடத்தியுள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *