இலங்கை

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நடைபெற்றது.

ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன், மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *