இலங்கை

தமிழ் முஸ்லீம் தலைவர்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டுவிட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்!  

உள்ளூராட்சி சபைகளை ஆட்சியமைப்பில் தமிழ் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா, சமூகம் ஒன்றுபட வேண்டிய தேவைகள் பற்றி காலங்கடந்து ஏற்று கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் 30 ஆசனங்களை ஆம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காக்கிரசும், 26 ஆசனங்களை மக்கள் காங்கிரசும், 20 ஆசனங்களை தேசிய காங்கிரசும் நேரடியாக முசாரப் பொத்துவிலில் 08 ஆசனங்களையும் அதே நேரத்தில் சுயேட்சை குழுக்களை அந்த பிரதேசத்தில் 22 க்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றிருக்கின்றது.

முஸ்லீம் சமூகம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பல உரிமைகளை இழந்திருக்கின்ற நேரத்திலே எங்களுடைய கோரிக்கைகளை அல்லது அபிலாசைகளை இனவாதமாக, மதவாதமாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் எடுத்தியம்புவதற்கு சவாலாக நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறிய போது அதனை ஏற்றுக் கொண்டதாக நான் அறியவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடைய தலைவர் மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி அவர் தமிழ் கட்சிகளுடனான உடன்பாட்டுக்கு வந்தது போன்று எந்தவொரு முயற்சியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனோ, தேசிய மக்கள் காங்கிரசுடனோ, முசாரப்புடனோ ஒன்று பட்ட தீர்மானத்துக்கு வரவில்லை என்பதை இன்றை வரைக்கும் முடிவுக்கு வரவில்லை.

அதே போன்று வடகிழக்கில் பெருமாபான்மையை பெற்ற தமிழரசு கட்சியும் விக்னேஸ்வரனின் ஜனநாயக முன்ணனியும், கஜேந்திகுமாருடைய தமிழ் காங்கிரசும் நேற்று வரை அந்த பேச்சு வார்த்தைக்கு முடிவுக்கு வரவில்லை.

அவரவருகளுடைய ஆதிக்கம் பற்றி பேசுவார்களே தவிர ஒன்றுபட்ட ஒரு செயற்பாட்டின் மூலமாக தேசிய மக்கள் சக்தியினுடைய சவால்களுடைய முயற்சிக்கு முகங்கொடுப்பதற்கு எந்த முயற்சியையும் இவர்கள் பெற்று கொள்ளவில்லை.

எதிர்காலத்தில் மாகாண சபைகள் பாராளுமன்றம் வருகின்ற போது தனித்துவமாகவோ அல்லது தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கேட்க முடியும்.

ஆனால் நாளையில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந்த உள்ளூராட்சிமன்ற சபைகள் அமையப்போகின்ற நேரத்திலே கேவலம் இவர்கள் ஒரு முடிவு காண முடியாத தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தீர்க்கமான முடிவினை இந்த வாரத்திற்குள் எடுத்து அவர்கள் சமூகத்துக்காக ஒன்றுபட வேண்டும்.என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *