இலங்கை

செல்பி மோகத்தால் பறிபோன இரு மாணவிகளின்உயிர்; முல்லைத்தீவில் சோகம்

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் செல்பி எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர்.

இந் நிலையில் இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு,மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *