முச்சந்தி

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – ஜூன் 23 மீண்டும் விசாரணை

கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஜூன் மாதம் 23 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடபெறும் என்றும், மேலதிக நீதிபதி பசன் அமரசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி நீதிமன்றம் முன்பாக அமைதிப்  போராட்டம் ஒன்றும்  இடம்பெற்றது.

குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டாம் எனவும், நீதி கிடைக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக குரல் எழுப்பினர்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலைய பணிப்பாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சிவில் சமூக பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. உயிரிழந்த மாணவியின் சார்பில் பிரபலமான நான்கு சட்டத்தரணிகள் முன்லையாகியிருந்தனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் இருந்து கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி குறித்த மாணவி குதித்துத் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button