முச்சந்தி
குயின்ஸ்லாந்தில் தமிழ் இலக்கிய விருது விழா!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ் விருது விழா நடைபெற உள்ளது.
தமிழ் இலக்கியத் தோட்டம் நடாத்தும் விருது வழங்கும் விழாவும் இலக்கியச் சங்கமமும் எதிர்வரும் 25-05-2025 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3:30 முதல் மாலை 7:00 மணி வரை கிரேன்ஜ் சமூக மண்டபம், 187 வில்ஸ்டன் சாலை, நியூமார்க்கெட், குயின்ஸ்லாந்து 4051( Grange Community Hall, 187 Wilston Rd, Newmarket QLD 4051) எனும் முகவரியில் நடைபெறும்.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர், மூதறிஞர், கலாபூசணம், கலைமாமணி, தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கும், தமிழ் நாட்டு தமிழறிஞர், நாவலர், எழுச்சிக் கவிஞர் எ.இரவிச்சந்திரன் (கதிர்மதியன்) அவர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
நீண்டகாலமாக தமிழ் இலக்கியத் துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், அவர்களின் இலக்கிய பொன்விழா நிறைவையொட்டி மாபெரும் விருது வழங்கும் விழாவும் இலக்கியச் சங்கமமும் நடைபெற உள்ளன.
பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு இவ்விரு இலக்கிய அறிஞர்களின் தமிழ் இலக்கியத் துறையில் ஆற்றிய சாதனைகளை எடுத்தியம்பி அவர்களைக் கௌரவிப்பதுடன் பல மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன.
குயின்ஸ்லாந்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் வருகைதர இலக்கிய விழாக்குழு அழைத்துள்ளது.

![]()