முச்சந்தி
பாகிஸ்தானில் தனிநாடு கோரும் பலூசிஸ்தான்!… இந்திய ஆதரவும், சீனாவிற்கு தலைவலியும்!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

எங்கள் விடுதலைக்கு உங்கள் உதவி தேவை என இந்தியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் பலூசிஸ்தான் மக்கள்.பாகிஸ்தானின் ஆதிக்கம் மற்றும் அதன் ராணுவ கெடுபிடிகளில் இருந்து தங்கள் நிலத்தை விடுவிக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்று கூறி கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் பலூசிஸ்தான் மாகாண மக்கள், தங்களை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலூசிஸ்தான் போராட்ட குழுவை சேர்ந்த “அட்டா பலோச்” அமைப்பினர் வெளியிட்ட செய்தியில், பலூசிஸ்தான் விடுதலைக்கு இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை என வலியுறுத்தி கோரியுள்ளனர்.
காஷ்மீர தாக்குதல் எதிரொலி:
தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22/4/25 அன்று நடந்த கொடூர தாக்குதலில் சுமார் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதால், இந்தியா பலூசிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு வருகிறது. பலூஸ்தினிய மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் இந்திய அரசு காஸ்மீரிகளின் போராட்டத்தை அடக்கி வைத்துள்ளது.
பலூஸ்தினிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் இந்திய அரசு, காஸ்மீரிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் பாகிஸ்தான் அரசுடன் பல ஆண்டுகளாக பகைமையை நீடித்து வருவதும் அறிந்ததே.
உண்மையில் இந்தியா -பாகிஸ்தான் இரண்டு அரசுகளும் தமது நாடுகளில் தேசிய இனங்களை அடக்கி ஆளும் அரசுகளாகவே இருக்கின்றன. ஏனெனில் மக்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர். இதனால் தேசங்கள் விடுதலையை விரும்புகின்றன என்பதும் மறுக்க முடியாது.
அத்துடன் அரசுகள் மக்கள் மீது போர்களை திணிக்கின்றன. இதனால் புதிய நாடுகள் பிறக்கின்றன என்பதும் யதார்த்தமே. அண்மையில் முதன்முறையாக பாகிஸ்தானின் அரசியல் கட்சியிடமிருந்தே, தனி பலூசிஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வெளிப்படையான குரல் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதாக பாகிஸ்தானுக்கு மேலாக நீண்ட காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இன்னொர் பங்காளதேஷாக மாறுமா ?
தற்போது பலூசிஸ்தான் விவகாரத்தை இந்தியா முக்கிய துரும்புச்சீட்டாக
கையிலெடுத்துள்ளது. பலூசிஸ்தானை, இன்னொரு வங்கதேசமாக பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று கோபத்தில் பாகிஸ்தானை கொந்தளிக்க வைத்துள்ளது.
கையிலெடுத்துள்ளது. பலூசிஸ்தானை, இன்னொரு வங்கதேசமாக பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று கோபத்தில் பாகிஸ்தானை கொந்தளிக்க வைத்துள்ளது.பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அங்கு உரிமைகளுக்காக போராடும் தலைவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் இந்திய மத்திய அரசு கூறியுள்ளது.
உண்மையிலேயே பலூசிஸ்தானை இன்னோரு பங்காளதேஷாக உருவாக்க முடியுமா என்றால், அது சாத்தியமில்லை என்றே கூறலாம். பங்காளதேஷ் போன்று, பலூசிஸ்தான் இந்திய எல்லையையொட்டி அமைந்திருக்கவில்லை. அதன் எல்லைப்பகுதிகள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானையொட்டி அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வழியாக போராட்டத்திற்கான உதவிகளை செய்யலாமே தவிர அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இடங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பலூசிஸ்தானின் பூர்வகுடி பழமைவாதிகள். அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்கள் அல்ல என்பதும் உண்மையே.
ஆயினும் இன்னொரு பங்காளதேஷாக பலூசிஸ்தான் மாறுமா என இந்தியாவின் எச்சரிக்கையானது காஷ்மீரை பாகிஸ்தான் தூண்டினால், நாங்களும் பலூசிஸ்தானை தூண்டிவிடுவோம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.சீனாவிற்கும் தலைவலி ?
காஷ்மீர எல்லையில் பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானில் பலூச் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை கண்டு பாகிஸ்தான் இராணுவம் அச்சதில் உள்ளதாக்கவும் கூறப்படுகிறது. இது சீனாவிற்கும் தலைவலியை அதிகரித்துள்ளது.
ஏனென்றால், சீனா பலூசிஸ்தானில் இலட்சக்கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த பகுதி சீன புறநகராக மாறி உள்ளது என்றே கூறலாம். இந்த பிராந்தியத்தில் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன. இங்கிருந்து கனிம வளங்களை பிரித்தெடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை வளமாக்கி வருகின்றனர். இதனால் பலூச் மக்கள் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் அரசை எதிர்த்து வருகின்றனர்.
அத்துடன் சீனாவிற்கு நிலங்களை தாரை வார்க்கும் பாகிஸ்தான் அரசின் செயலை எதிர்க்கும் பலூசிஸ்தானில் உள்ள மக்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்களின் சடலங்கள் தான் கிடைக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆயினும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போராளிகள் பாகிஸ்தான் இராணுவத்தை தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பலூசிஸ்தான் தனிநாட்டு போராட்டம் :
1947ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவை பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது.
ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.
ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எதுவாயிருந்தாலும் பாகிஸ்தானில் கோலோச்சுவது பஞ்சாபி முஸ்லீம்களும் சிந்தி முஸ்லீம்களுமே. இவர்கள் பலூச்சிகளையும் பக்தூனியர்களையும் (பத்தானியர்கள்) நீண்ட காலமாக ஒடுக்கி வருகின்றனர். அதனை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவ்விரு இனங்களும் விடுதலை கோரிப் போராடி வருகின்றன.
பொருளாதார ரீதியாக, மற்ற பாகிஸ்தானியர்களுடன் ஒப்பிடும் போது பலூச்சிகள் தனிநபர் வருமானம் மிகக் குறைவு. கட்டமைப்பு ரீதியான பொருளாதாரச் சுரண்டல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) இருந்து பெரும்பாலான பலூச் சமூகத்தை விலக்கியது மற்றும் பிற பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை பலூச் மக்களை போராட்ட வழியில் செயல்படத் தூண்டின.
பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
பலூசிஸ்தான் போராட்ட வரலாறு :
பிரிட்டீஷிடம் இருந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11இல் பலூசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெற்றது. இதையடுத்து 1947, டிசம்பர் 16இல்்அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழியப் பட்டது. ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன.
இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
மறைமுக இந்திய ஆதரவு :
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியர்கள் தார்மீக ஆதரவு செய்வதாக பலூசிஸ்தான் விடுதலை இயக்கமான ‘ஹிந்த் பலூச்’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில் பலூசிஸ்தான், பிரிட்டிசிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோதிலும், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர உரிமைகளுக்காக இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர். தங்களது அடையாளம், கலாசாரம் ஆகியவற்றின் மீது பலூசிஸ்தான் மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர் என்றும் கூறினார். தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதால் பாகிஸ்தானில் இருந்து பிரித்து பலூசிஸ்தான் தனிநாடாக அமைக்க இந்தியா உதவ வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. இதனிடையே பலூசிஸ்தானில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
பலூசிஸ்தான் இனப்படுகொலை :
பலூசிஸ்தான் மக்கள் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தால் திடீரென நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், பலூசிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அதற்கு எதிரான மற்றும் தனிநாடு போராட்டங்களை தீவிரப்படுத்தி சர்வதேசமெங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர கோஷங்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.
சீனாவின் நட்புக்கரம் :
இப்போது பாகிஸ்தானிற்கு பலூச்சிஸ்தான் பிரச்சனை பெரிய பிரச்சனையாக
உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரும் இவர்களின் போராட்டத்தை நசுக்குவதில், சீனாவும் நட்புக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரும் இவர்களின் போராட்டத்தை நசுக்குவதில், சீனாவும் நட்புக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பலூசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37% மக்கள் தனி பலூசிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால் பலூசிஸ்தானின் மோதல்களைத் தீர்க்க அரசியல் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்றும், பலூசிஸ்தானின் முக்கிய பிரச்சினைகள் அரசியல் மற்றும் பொருளாதாரம், பரஸ்பர புரிதல், சமரசம் மற்றும் பலூச்சின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
![]()