பிரான்ஸில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லும் சுற்றுலாத் தலங்கள் எவை தெரியுமா ?

1) பிரான்ஸ்
பிரான்ஸில் காணப்படும் முக்கியமான 10 சுற்றுலா தலங்களை இங்கு காணலாம்.
1. ஐஃபில் கோபுரம் (Eiffel Tower), பாரிஸ்

பிரான்ஸின் அடையாளமாக விளங்கும் இந்த கோபுரம், பாரிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரம் இரவு நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.

உலகின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாக லூவ்ர் அருங்காட்சியகம் விளங்குகின்றது. இங்கு உலகப்புகழ்பெற்ற மொனாலிசா போன்ற பல்வேறுபட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோதிக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நோத்திர் டேம் தேவாலயம் காணப்படுகின்றது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இத் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரஞ்சு அரசர்களின் வாசஸ்தலமாக வெர்சை அரச மாளிகை விளங்கியது. அங்கு காணப்படும் தனித்துவம் வாய்ந்த அழகான தோட்டங்கள், அரங்குகள், கலைப்பொருட்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகக் காணப்படுகின்றன.

மொன்ட்-செயின்ட் மிஷெல் எனப்படுவது கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இத் தீவில் உள்ள மலையின் மீது பிரமாண்ட தேவாலயமொன்று காணப்படுகின்றது. அத்துடன் குறித்த தேவாலயத்தைச் சுற்றி கிராமமொன்றும் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தையும் தேவாலயத்தையும் பார்வையிட வருடம் தோரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக லியான் காணப்படுகின்றது. இந்நகரத்தில் காணப்படும் ரெனசான்ஸ் கட்டிடக்கலையும் பிரஞ்சு பாரம்பரிய உணவுகளும் பிரான்ஸ் நாட்டின் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுகின்றது.

போர்டக்ஸ் உலகப்புகழ் பெற்ற வைன் (Wine) உற்பத்தி மையமாகும். இங்கு காணப்படும் வயல்களும் பழமையான அரண்மனைகளும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

இதுபிரான்சின் கிழக்கு பகுதியில், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகான மலைப்பகுதி நகரமாகும். அத்துடன் இந்நகரமானது மலை ஏறுதல் மலைச் சறுக்கள் உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர் போன இடமாக விளங்குகின்றது.
9. நைஸ் (Nice)

நைஸ் பிரான்ஸின் ஐந்தாவது பெரிய நகரமும் மத்தியதரைக் கடல் (Mediterranean Sea) அருகிலுள்ள, அழகான கடற்கரை நகரமும் ஆகும். இந்நகரமானது இத்தாலி மற்றும் பிரெஞ்சு பாரம்பரியத்தின் கலவையாகக் காணப்படுகின்றது.
இங்கு நீண்ட கடற்கரை வழி நடைபாதை, பழைய கற்கள் வீதிகள் மற்றும் புகழ்பெற்ற Marc Chagall Museum ஆகியன காணப்படுகின்றன.
10. சிறிய நகரங்கள் (Provence, Alsace )


Provence என்பது பிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய பிராந்தியமாகும், இது லாவெண்டர் தோட்டங்கள் மற்றும் திராட்சை தோட்டங்களுக்கு பெயர்போன இடமாகக் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளின் அபிமானத்தை பெற்றவையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

![]()