இலங்கை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக கதைத்தவருக்கு மிரட்டல்

தென்மராட்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக கருத்து வெளியிட்ட சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதியை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மிரட்டும் விதமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அர்ச்சுனா எம்.பி. விடயப் பரப்பிற்கு வெளியே சென்று சில கருத்துக்களை வெளியிட்ட நிலையில் மேற்படி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி எழுந்து ஒலிவாங்கியைப் பெற்று, பயனுள்ள விதத்தில் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே கூட்டத்தில் பின் இருக்கை ஒன்றின் மேலேறி இருந்த ஒருவர், மேற்படி சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதியை மிரட்டும் விதமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இருந்த போதிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களோ அல்லது கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்களோ அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *