நெருக்கடி தொடர்பில் சந்திப்பு மகிந்தவுடன் மீண்டும் அனைவரும் இணைவர்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு என்பவற்றுக்கு மத்தியில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. விஜேராமவில் உள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய உறுப்பினர்கள் ஒன்றாக இருந்ததாகவும் அவர்களையும் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![]()