உள்ளூராட்சித் தேர்தலில் ரணில் -சஜித் தரப்பு இணைந்து போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதை தீர்மானிக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற விவாதம் எழுந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுடனும் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி, மூன்றாம் சுற்று கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. முந்தைய கலந்துரையாடல்களின் போது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் இரு கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களின் கருத்துக்கள் குறித்த கலந்துரையாடலில் பரிசீலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கலந்துரையாடலுக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் குழு நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button